CPM - Chapter wise Study Materials [PDF], Slideshows [PPT] & 2&16 Mark Question Banksgoo.gl/aVJOV
— Ernesto Balaji (@iAmTheErnesto) May 13, 2012
காகிதம்
டேக் லைன் லாம் இருந்தாதான் படிப்பீங்களோ! :P
Sunday, May 13, 2012
CPM
Tuesday, May 8, 2012
LiLiUSB Creator ஒரு அறிமுகம்
ஐயோ போச்சே!
நீங்கள் உபயோகிக்கும் விண்டோஸ் இயங்குதளம் திடீரெண்டு பழுதுபட்டு உறைந்தாலோ, துவங்க (Boot) ஆக மறுத்தாலோ, ஒரு கணம் இவ்வாறு அலறித்தான் போவீர்கள். இல்லையா?
அந்த நேரத்தில் உங்களுடைய முக்கியமான கோப்புகளை (Files) எப்படியாவது மீட்க முடிந்தால் வசதியாக இருக்குமல்லவா? இங்குதான் LiLiUSB Creator மென்பொருளின் தேவை ஒப்பற்றதாகிறது.
இந்தப் பதிவில் லினக்ஸ் இயங்குதளத்தைப் பற்றியும், அதனுடன் தொடர்புடைய இந்த சிறு மென்பொருள் பற்றியும் நான் அறிந்ததை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.
நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். அனால் லினக்ஸை அறிந்தவர்களும், பயன்படுத்துபவர்களும் நம்மவர்களில் சொற்பமே..
லினக்ஸ்:
இது ஒரு திறமூல (Open Source) இயங்கு தள முறைமை ஆகும். விண்டோஸைப் போல் அல்லாமல் காசு கொடுக்காமல் இலவசமாகப் பயன்படுத்தவும், நாமே நிரல்களை உருவாக்கவும், மாற்றியமைக்கவும் இயலும். மேக்கிற்கு ஆப்பிள், விண்டோஸுக்கு மைக்ரோசாப்ட் போன்று, லினக்ஸுக்கு பிரத்தியோகமான ஒரு நிறுவனம் மட்டும் சொந்தம் கொண்டாட இயலாது. BOSS, Ubuntu, Fedora, LinuxMint, Oracle, Red Hat போன்று ஏராளமான வடிவங்களில் தொடர்ந்து தத்தமது பதிப்புகளை வெளியிட்டு, மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
எனினும் விண்டோஸை பயன்படுத்துபவர்களுக்கு தலை கால் புரியாததாகவே முதலில் தோற்றமளிக்கும். தவிர விண்டோஸ் பயனர்கள் எதிர்பார்க்கும் அபிமான நிரல்கள் யாவும் இங்கு குறைவே. இணைய உலவி (Web Browser) மற்றும் ஊடக நிரல்கள் (Media Players) பொருத்தமட்டில் கூகிள் குரோமும் VLC மீடியா பிளேயரும் நமக்கு துணை நிற்கின்றன. எனினும் அலுவலகக் கோப்புகளை இயக்கும் தேவைகளுக்கு Microsoft Office தொகுப்பையே பயன்படுத்தியவர்களுக்கு Open Office, Libre Office எதுவும் மன நிறைவைத் தரக்கூடியதாக இருக்காது. தவிர மைக்ரோசாப்ட் ஆபீசில் உருவாக்கிய கோப்புகளின் வடிவம் வெகுவாக சிதைந்த நிலையிலேயே பின்னவற்றில் திறக்கப்படுவது ஒரு குறை.
நிரலாக மொழி நிரல்களுக்கு அப்பாற்பட்டு, பொறியியல் மற்றும் அறிவியல் துறை சார்ந்த துறை ரீதியான நிரல்கள் இங்கு குறைவே. உதாரணத்திற்கு AutoCAD, Revet Architecture, STAAD.Pro போன்ற குடிசார் பொறியியல் துறை நிரல்கலாகட்டும் Photoshop, Picasa, 3DS Max Design போன்ற உயர்தர வரைகலை மென்பொருள்கள் அனைத்தும் இங்கு காணக்கிடைக்காது. கிடைக்கப்பெறும் ஏராளமான திற மூல இலவச மென்பொருட்கள், வெகு சொற்பமான வசதிகளையே கொண்டுள்ளன. உதாரணமாக OpenCAD எனும் திற மூல மென்பொருள் இரு பரிமாண வரைதல் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் விண்டோஸ் இயங்குதளம் சில அனுகூலங்களையும் பெற்றுள்ளதை எவராலும் மறுக்க இயலாது.
பல நிறைகளை லினக்ஸ் இயங்குதளங்கள் பெற வேண்டி இருந்தாலும், சில அத்தியாவசியமான, ஆபத்பாந்தவ குணங்களையும் இவை கொண்டிருக்கின்றன.
பதிவின் முதல் வரியைப் போல் அலறும் தருணங்களில், உங்களுக்கு கைகொடுக்கும் இணையற்ற நண்பனாக லினக்ஸ் இயங்குகிறது. சமீப காலமான லினக்ஸ் இயங்குதளங்கள் பிரபலமடைவதற்குக் காரணம், அவை ஒரு கணினியில் நிறுவப்படாமலேயே (Without Installation) தற்சார்புடையதாக இயக்கப்படக் கூடியதாக இருப்பதால்தான். நீங்கள் ஒரே கணினியில் விண்டோஸையும், லினக்ஸ் பதிப்பு ஒன்றையும் நிறுவுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. விண்டோஸில் வன்வட்டு (Hard disk) C, D, E,.. என்ற எழுத்துக்களால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றில், ஒவ்வொரு பிரிவிலும் விண்டோஸ் Xp, Vista மற்றும் 7 போன்ற வெவ்வேறு பதிப்பு விண்டோஸ் இயக்க முறைமைகளை பதிந்து இயக்கலாம். ஆனால், லினக்ஸ், வன் வட்டினை இவ்வாறு பிரிப்பதில்லை. FAT, FAT32 பொன்ற File system இங்கு பொதுவாகப் பயன்படுதப்படுவதுமில்லை.
விண்டோஸ் நிறுவப்பட்டுள்ள கணினியில் லினக்ஸ் நிறுவ எண்ணி தவறுதலாக எதையாவது நோண்டி, ஒட்டுமொத்த தரவுகளையும் இழந்தவர்களும் இங்கு அதிகம். இந்த சிக்கல்களைக் களைய ஏதுவாக ஒரு உபாயத்தை லினக்ஸ் நமக்கு வழங்குகிறது. Live CD/ DVD என்ற முறையில், குறுவட்டுக்களில் லினக்ஸ் இயங்குதளத்தை பதிந்து அதிலிருந்தவாறே இயக்க முறைமையை இயக்கம் வசதியை லினக்ஸ் சில வருடங்களுக்கு முன் நமக்குத் தந்தது.
இதன் மூலம் தேவையில்லாமல், Hard diskஇன் ஒரு Partition செலவழிப்பதையும் தவிர்க்கலாம், எந்த ஆபத்தும் நேராமலும் பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லவா?
ஆனால், இந்த முறை அவ்வளவு பயன் தருவதாக இருக்கவில்லை. காரணம், நாம் உருவாக்கிய கோப்புகள் ஏதும் பதிவாகாமல் , கணினியை அணைத்தவுடன் அனைத்தும் அழிந்து போகும் வண்ணம் இருப்பதால் தான். தவிர CD/DVD இல்லாத மடிக் கணினிகளில் (உதாரணமாக தமிழக அரசு, மாணவர்களுக்கு வழங்கிய விலையில்லா [இலவசம் னு சொன்னா என்னவாம்?] மடிக்கணினி போல) USB மட்டுமே தரவுப் பரிமாற்றத்திற்கு (Data Transfer) ஒரே வழியாக இருக்கும் பட்சத்தில், USB இடைமுகத்தின் வாயிலாக லினக்ஸை பயன்படுத்தும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
LiLi USB Creator
பென் டிரைவ் வழியாக லினக்ஸை இயக்குவதற்கு ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றுள் எளிமையானதும், இனிய பயனர் இடைமுகப்பு உடையதாகவும் LiLi USB Creator செயல்படுகிறது.
இந்த மென்பொருளின் மூலம், லினக்ஸ் மட்டுமல்லாது, விண்டோஸ் விஸ்டா, 7 மற்றும் 8 (சமீபத்திய Consumer Preview) வரை உள்ள இயங்கு தளத்தின் நிறுவுதல் கருவியாக பென் டிரைவினை மாற்ற இயலும். கவனிக்கவும், இதைக் கொண்டு இவ்வியக்க முறைமைகளை நிறுவமட்டுமே இயலும். லைவ் லினக்ஸ் போன்று பென் டிரைவிலிருந்தே இயக்க முடியாது.
இதைக்கொண்டு, CD/DVD டிரைவ்கள் இல்லாத மடிக்கணினிகளில் ஏதேனும் சிக்கல் ஏற்படும் போது, விண்டோஸ் இயக்க முறைமையை நிறுவ இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
தவிர Kaspersky Anti Virus பொன்ற நச்சு நிரல் நீக்கி மென்பொருட்கள் வழங்கும் Rescue Diskஐயும் பென் டிரைவில் இயக்க இதைப் பயன்படுத்தலாம்.
மேலதிக விளக்கங்களுக்கு www.linuxliveusb.com என்ற வலைதளத்தைக் காணவும்.
இப்போது, LiLi USB Creator ஐக் கொண்டு எவ்வாறு உபுண்டு 12.04 LTS (Long Time Support) இயக்கமுறைமையை பென் டிரைவில் நிறுவி இயக்கலாம் என்று காணலாம்.
Ubuntu 12.04 LTS நிறுவுதல்:
படி 1: லைவ் லினக்ஸ் நிறுவப்பட வேண்டிய பென் டிரைவைத் தேர்வு செய்க
படி 2: பென் டிரைவில் நிறுவப்பட உள்ள ஏதேனும் ஒரு இயக்க முறைமையின் குறுவட்டின் ISO Image கோப்பு, அல்லது CD/DVD மூலமாக தேர்வு செய்க. ISO கோப்புகள் சராசரியாக 700 MB அளவு இருக்கும். எனவே பதிவிறக்கம் செய்வது நேரம் இழுக்கக்கூடியதாக அமையலாம்.
படி 3: தற்காலிக முறையா (Live Mode) அல்லது நிரந்தர முறையா (Persistent Mode) என்பதைத் தேர்வு செய்க. Live Modeஇல் லினக்ஸை இயக்கும் போது, நீங்கள் உருவாக்கிய கோப்புகள், மாற்றியமைத்த விருப்பத்தேர்வுகள், நிறுவிய மென்பொருட்கள் அனைத்தும் கணினியை அனைத்து மூடியவுடன் மறைந்து விடும்.
மாறாக நிரந்தர முறையில், அனைத்தும் சேமிக்கப்படும். மறுமுறை மீண்டும் பென் டிரைவ் வழியாக லினக்ஸை இயக்கும் போது நீங்கள் சேமித்தவற்றைக் கையாளலாம்.
Persistence Fileஇன் அளவு குறைந்தது 300 MB இருப்பது நலம். தங்களது பென் டிரைவின் அளவு மற்றும் உங்கள் தேவையைப் பொறுத்து, இதனை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
படி 4: இவ்விடம் உருவாக்கப்படக்கூடிய கோப்புகளை இயல்பிலேயே மறைத்து வைக்கும் தேர்வை செய்யலாம். எனவே விண்டோசுக்குள் செருகப்படும் போது பிற பயனர்களுக்கு தேவையில்லாத குழப்பம் ஏற்படுவதும், தவறுதலாக கோப்புகள் அழிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.
பென் டிரைவை FAT / FAT 32 முறையில் ஒழுங்குபடுத்தும் தேர்வையும் இங்கு நாம் செய்ய முடியும்.
Virtual Box மென்பொருள் உதவியுடன், விண்டோசுக்குள் இருந்தே இந்த லினக்ஸ் லைவ் இயக்க முறையை முயன்றும் பார்க்கலாம் (Simulation of an Operating System inside another Operating System). ஆனால் இதைச் செய்வதற்கு, விர்ச்சுவல் பாக்ஸ் மென் பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு நிறுவப்பட வேண்டும். இது கூடுதல் நேரத்தையும் வேண்டும். தவிர கணினியின் செயல் திறன் நன்றாக இல்லாத பட்சத்தில், இயக்க முறைமை தினறிப்போக வாய்ப்புகள் அதிகம். ஆகையால் இதை நோண்டாமல் விடுதல் நலம்.
படி 5: இதுவே இறுதிப் படி. கொடுக்கப்பட்டுள்ள மின்னல் குறியைச் சொடுக்குவதன் மூலம், தேர்வு செய்யப்பட விருப்பத்தேர்வுகளுடன் லைவ் லினக்ஸ் இயக்க முறை உங்கள் பென் டிரைவில் பதியப்படும். இந்த செயல் நிறைவடைய சுமார் ஐந்து நிமிடங்கள் வரை ஆகலாம்.
விளக்கக் காணொளியை யூடியூபில் காண்க
விளக்கக் காணொளியை யூடியூபில் காண்க
*****
அடுத்து என்ன? பென் டிரைவை உருவி மாட்டி, கணினியை அணைத்து உயிர்ப்பித்து லைவ் லினக்ஸை சோதனையிட்டுப் பாருங்கள்.
உபுண்டுவைப் பொருத்தவரை, ஒவ்வொரு முறை துவங்கும் போதும், தன்னை கணினியில் நிறுவலாமா அல்லது லைவ் முறையிலேயே இயக்கலாமா என்று கேட்டு தொந்தரவு செய்யும். இது துவக்க நேரத்தையும் சிறிது தாமதப்படுத்தும்.
இதிலிருந்து விடுபட, Ubuntu Terminalஐ துவக்கி, பின்வருமாறு உள்ளிடவும்
sudo apt-get remove ubiquity
இதன் மூலம் அந்த குறிப்பிட்ட மென்பொருள் இயக்க முறைமையில் இருந்து நீக்கப்படும்.
மற்ற படி, இணைய வசதி இருப்பின், VLC Media Player, Google Chrome போன்ற அத்தியாவசிய மென்பொருட்களை நிறுவிக்கொள்ளவும்.
அதிக அளவு மென் பொருட்கள் நிறுவ முயற்சிக்கையில் வன் வட்டின் அளவு குறைவாக இருப்பதாக பிழைச் செய்தி வரக்கூடும். இதை Persistent Fileஇன் அளவைக் கூட்டி அமைப்பதன் மூலம் மூன்றாம் படியிலேயே சரி செய்யலாம்.
LiLiயின் பயன்கள் என்ன?
- விண்டோஸ் செயல் இழக்கும் போது, முக்கியக் கோப்புகளை மீட்கப் பயன்படும்
- விண்டோவ்ஸ் இயக்க முறையில் பென் டிரைவ் பயன்படுத்தும் வசதி முடக்கப்பட்டுள்ள கணினிகளில், நமக்குத் தேவையான கோப்புகளை எடுக்கப் பயன்படும். (இது சற்று விவகாரமான செயல். காரணம் அலுவலக நியதி கருதி, பென் டிரைவ் மூலம் கோப்புகளைக் காப்பி செய்வது தடை செய்யப்பட்டிருப்பின், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியே இந்தக் காரியத்தை நீங்கள் அறிந்து செய்கிறீர்கள் என்பதை உணருங்கள்).
- எனினும் விண்டோஸ் இயக்க முறைமையில் Bit Locker வசதி மூலம் Drive Encryption செய்யப்பட்ட வன்வட்டுப் பிரிவுகளை லைவ் லினக்சில் காண இயலாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியக் குறிப்புகள்:
- பென் டிரைவினால் பூட் செய்யும் வசதி உங்கள் கணினி Mother Boardஇனால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே இம்முறை அனைத்தும் வேலை செய்யும். மடிக்கணினிகளைப் பொருத்தவரை எல்லா கருவிகளும் பெரும்பாலும் இதை சப்போர்ட் செய்கின்றன. BIOS Settings இல் Boot Priorityயில் USB HDD /Removable Storage Devices என்பதை முதல் விருப்பத் தேர்வாக வைத்துவிட்டு முயற்சிக்கவும்.
- USB Disk Security மற்றும் இதர பிற நச்சு நிரல் நீக்கி புரோகிராம்கள், லைவ் லினக்ஸ் சிஸ்டம் பைல்களை Risky/Vulnerable என்று தவறாகப் புரிந்து கொண்டு அவற்றை நீக்கலாம். இது போன்ற சிக்கல்களில் இருந்து விடுபட பென் டிரைவை Write Protect செய்யவும்.
பொறுமையுடன் வாசித்ததற்கு நன்றி :) முடிந்தால் மறுமொழியிடவும்..
USB Write Protect செய்வது எப்படி?
தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை வள வள என்று எழுதுவதை விட விளக்கப்படமாகக் காட்டினால் தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் என்றெண்ணி இப்பதிவை உருவாக்குகிறேன்.
Saturday, April 14, 2012
Friday, February 10, 2012
Grip
Hello Fellas,
Graduate Aptitude Test for Engineers - GATE 2012 is ahead in less than a day. Candidates applied for a lot of reasons; For getting jobs in Public Sector Units, to get into Prestigious Institutions like IITs and NITs for their Post Graduate Courses.
Most of the applicants (like me ) don't dare to appear in the examination itself or very reluctant to write it because they know exactly what their result is. Some people really tried hard for preparation; few others frustrated with the toil and convinced themselves for the next year; And rest of the smart working intellects, those who have the 'grip', are feeling contented at the moment.
I wish the very best for everyone those who deserve pass through the GATE and succeed in their future. Lets see what 'grip' means in Chetan Bhagat's perspective!
Grip.
Yes, that's the word.
The trick to these entrance exams is that you have to get a grip on them. You need a game plan. What are your strong subjects, which are your weak ones? Are you working with the teachers on the weak areas? Are you tracking your progress on the mock-tests? Are you thinking about nothing but the exam all day? Do you eat your meals and take your bath as fast as possibile so that you have more time to study? If your answer is 'yes' to all these questions, that's when you can say you have a grip.
That's the only way to have a shot at a seat. Of course, you could be one of those naturally talented students who never have to study much.
Disci: The colored text above is an excerpt [Page No: 81-82] of copyrighted material from the Best seller Novel Revolution 2020 by Chetan Bhagat.
To know more,
R2020 Home Page
Wikipedia Articles:
Graduate Aptitude Test for Engineers - GATE 2012 is ahead in less than a day. Candidates applied for a lot of reasons; For getting jobs in Public Sector Units, to get into Prestigious Institutions like IITs and NITs for their Post Graduate Courses.
Most of the applicants (like me ) don't dare to appear in the examination itself or very reluctant to write it because they know exactly what their result is. Some people really tried hard for preparation; few others frustrated with the toil and convinced themselves for the next year; And rest of the smart working intellects, those who have the 'grip', are feeling contented at the moment.
I wish the very best for everyone those who deserve pass through the GATE and succeed in their future. Lets see what 'grip' means in Chetan Bhagat's perspective!
Grip.
Yes, that's the word.
The trick to these entrance exams is that you have to get a grip on them. You need a game plan. What are your strong subjects, which are your weak ones? Are you working with the teachers on the weak areas? Are you tracking your progress on the mock-tests? Are you thinking about nothing but the exam all day? Do you eat your meals and take your bath as fast as possibile so that you have more time to study? If your answer is 'yes' to all these questions, that's when you can say you have a grip.
That's the only way to have a shot at a seat. Of course, you could be one of those naturally talented students who never have to study much.
Disci: The colored text above is an excerpt [Page No: 81-82] of copyrighted material from the Best seller Novel Revolution 2020 by Chetan Bhagat.
To know more,
R2020 Home Page
Wikipedia Articles:
Follow CB on Twitter @Chetan_Bhagat
Saturday, January 28, 2012
Sylvester Martin: Gate Preparation in 10 days
Sylvester Martin: Gate Preparation in 10 days: Hi Guys. Gate 2012 is in 10 days. I know many who haven't even started to prepare for gate yet.. So i have come in here with a solu...
Tuesday, January 3, 2012
Subscribe to:
Posts (Atom)

